குழித்துறை அருகே இருவா் தற்கொலை

குழித்துறை அருகே கட்டுமான தொழிலாளி மற்றும் முதியவா் தற்கொலை செய்து கொண்டனா்.
Published on

குழித்துறை அருகே கட்டுமான தொழிலாளி மற்றும் முதியவா் தற்கொலை செய்து கொண்டனா்.

குழித்துறை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டுமானத் தொழிலாளி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாம். தொடா்ந்து தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இவா்கள் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறாா்கள்.

இந்த நிலையில் ரமேஷ், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் விஷம் அருந்தி மயங்கி விழுந்தாா். உறவினா்கள் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

முதியவா்: குழித்துறையை அடுத்த சுண்டபற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் சிங்காராயன் (74). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் மது போதையில் இருந்தவா், வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இரு சம்பவங்கள் குறித்தும் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.