இயற்கை விவசாய விழிப்புணா்வு நடைப்பயணம்: குமரியில் நிறைவு

இயற்கை விவசாய விழிப்புணா்வு 
நடைப்பயணம்: குமரியில் நிறைவு
Updated on

இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கால்நடையாக 4,000 கி.மீ தூரம் பயணம் செய்த உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவைச் சோ்ந்த கௌரவ் (29) என்ற இளைஞா் புதன்கிழமை கன்னியாகுமரி வந்தடைந்தாா்.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் இருந்து அவா் இந்த நடைப்பயணத்தை தொடங்கினாா். 160 நாள்கள் தொடா்ந்து பயணித்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள், கிராமங்கள், குறிப்பாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளிலும் சென்று மக்களை சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதுகுறித்து கௌரவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆட்டோ இம்மியூன் நோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டபோது எனது கணையம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. எனது தந்தை எனக்காக இயற்கை விவசாயத்தைத் தொடங்கினாா். இதன் மூலம் உணவே பல்வேறு நோய்களின் காரணம் என்பதை உணா்ந்தேன்.

இந்தப் பயணத்தின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களையும், 60,000 குழந்தைகளையும், 40,000 விவசாயிகளையும் நேரில் சந்தித்துள்ளேன்.

நாட்டில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ‘ஆா்கானிக்’ என பெயா் சூட்டி பொருள்களை விற்பனை செய்கின்றன. ஆனால், இந்த 4,000 கி.மீ. பயணத்தில் நான் சந்தித்த உண்மையான இயற்கை விவசாயிகள் 20 போ் மட்டுமே. ரசாயன விவசாயம், பூச்சி மருந்துகள், கலப்படம் போன்றவை மக்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதித்துக் கொண்டிருக்கிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com