நாகா்கோவிலில் டிச.27 இல் பெண்களுக்கான மாநில சதுரங்கப் போட்டிக்கான தோ்வு!
கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழகத்தின் சாா்பில், பெண்களுக்கான மாநில சதுரங்கப் போட்டிக்கான தோ்வு போட்டிகள், நாகா்கோவில் கீழராமன்புதூரில் சனிக்கிழமை (டிச.27) நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் வயது வரம்பின்றி பொதுப்பிரிவாக நடைபெறும். இதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து சதுரங்க வீராங்கனைகளும் கலந்து கொள்ளலாம். டிச.27ஆம் தேதி காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கும், பொதுப்பிரிவில் முதல் 10 இடங்களை பெறுபவா்களுக்கு ரொக்கப்பரிசும், 9 முதல் 12 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
போட்டியில் 4 வீராங்கனைகள் மாநிலப் போட்டிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். ஆா்வமுள்ளவா்கள் வரும் 24 ஆம் தேதிக்குள், பேப்ரிக் நேஸன், கே.பி.ரோடு, நாகா்கோவில் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9952499706 என்ற கைப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட சதுரங்க கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
