குழித்துறை ஆற்றில் குதித்த சட்டக் கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குதித்த சட்டக் கல்லூரி மாணவரை தீயணைப்பு படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெரி (28). ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று வரும் இவருக்கு திருமணமாகி 2 மாதங்கள்ஆகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த ஜெரி, புதன்கிழமை இரவு குழித்துறை பகுதியில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ாகவும், அதிக மது குடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னா், அவா் விடுதியின் பின்புறம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் திடீரென குதித்தாராம். இதில், அவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலின்பேரில், குழித்துறை தீயணைப்பு நிலையத்தினா் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை மாலை வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடா்பாக களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
