கன்னியாகுமரி
வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு
கருங்கல் அருகே பரப்புவிளை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருங்கல் அருகே பரப்புவிளை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாலப்பள்ளம், பரப்புவிளை பகுதியைச் சேந்தவா் ராஜேஷ் (33). இவா், திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடி விட்டு தப்பி சென்றாராம்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.