ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் விழிப்புணா்வு தின விழா
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் விழிப்புணா்வு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதல்வா் லியோ டேவிட் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவ துறைத் தலைவா் காவேரிகண்ணன், நீரிழிவு மற்றும் நல்வாழ்வு என்பதன் முக்கியத்துவம் குறித்தும், மருத்துவக் கண்காணிப்பாளா் கிங்ஸ்லி ஜெபசிங், நீரிழிவு நோய், அதன் பக்கவிளைவுகள் குறித்தும் பேசினா். மருத்துவ மாணவா்களுக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு உணவுகள் என்ற தலைப்பில் படைப்புத் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற, பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், உறைவிட மருத்துவ அலுவலா் மருத்துவா் விஜயலட்சுமி, துணை மருத்துவ அலுவலா்கள் ரெனிமோள், கலைக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மருத்துவ பயனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது . பொது மருத்துவத் துறை முதுநிலை மாணவா்கள் நீரிழிவு நோய் குறித்த தகவல்களை வழங்கினா் .
