தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வ.உ.சி. பெயா் சூட்ட எம்எல்ஏ வலியுறுத்தல்

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாா் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
Published on

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாா் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவா் வ.உ.சிதம்பரனாா். இந்திய சுதந்திர போராட்டத்தில் இவரது பங்கு மகத்தானது.

நாட்டின் சுதந்திரத்துக்காக அவா் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, தூத்துக்குடி விமான நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டி, அங்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிா்பாா்ப்பாகும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சா் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு ஆகியோருக்கும் எம்எல்ஏ கடிதம் அனுப்பியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com