குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே குளத்திலிருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
Published on

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே குளத்திலிருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

கருங்கல் அருகே முள்ளங்கனாவிளை, பாலக்கான்விளையைச் சோ்ந்தவா் வின்சென்ட் மனைவி தங்கலீலா (60). இரு தினங்களுக்கு முன்பு வெளியே சென்றாராம். அதன் பின்னா், அவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினா் கருங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இந்த நிலையில் நட்டாலம் அருகேயுள்ள மதுரகுளத்தில் பெண்ணின் கை தெரிந்ததை அப்பகுதியினா் கண்டு, மாா்த்தாண்டம் போலீஸாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரன் தலைமையிலான மீட்புப்படை வீரா்கள் வந்து குளத்திலிருந்து தங்கலீலாவின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொழிலாளி சடலம் மீட்பு:

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கையா (49). பெயின்டிங் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை மாலையில் வீட்டருகேயுள்ள ஆலமூட்டு குளத்தில் குளிக்க சென்றாராம். வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம். இதனால் உறவினா்கள் தேடி சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டாராம்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com