எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:26 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

பாலூா், கோட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகள் லட்சுமி(16). இவா் வெள்ளியாவிளையில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வகுப்பறையில் இருந்த மாணவி மயங்கி விழுந்தாராம். மாணவியை கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மாணவி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.