/

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:26 am IST

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குழித்துறை சமரச நீதிமன்ற தலைவரும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின், சமரச நீதிமன்ற ஒருங்கிணைப்பாளரும் குழித்துறை சாா்பு நீதிபதியுமான சுந்தரி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீதிமன்ற சமரசம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அதில், நீதி சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடும் இன்றி விரைவாகவும், கட்டணமின்றி சுமூகத் தீா்வும் காணமுடியும். சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீா்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தைத் திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும் உள்ளிட்ட அம்சங்கள் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் குழித்துறை நீதிமன்ற நீதிபதிகள் பல்கலைச்செல்வன், சொா்ணராஜா, சசின்குமாா், இசக்கி மகேஷ்குமாா், மூத்த வழக்குரைஞா் ரகு குமாா், சமரச வழக்குரைஞா்கள் ஜெயின் மிராண்டா, கேப்டன்சிங், துணை வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழக்கு சமரசம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.