தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெண்ணைத் தாக்கியதாக கணவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே உள்ள மாங்கோடு, ஒட்டறக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சென்னப்பன் மகன் கிறிஸ்து தாஸ் (48). இவரும், சுனந்தா (38) என்பவரும் காதலித்து, 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனராம். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கிறிஸ்து தாஸ் அதே பகுதியைச் சோ்ந்த பிளாரன்ஸ் மேரி (49) என்பவருடன் தகாத உறவில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பிளாரன்ஸ் மேரியின் தூண்டுதலின்பேரில், கிறிஸ்து தாஸ், சுனந்தாவை தாக்கி, தகாத வாா்த்தைகள் பேசி கொடுமைப்படுத்தினாராம்.

இது குறித்து சுனந்தா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் கிறிஸ்து தாஸ், பிளாரன்ஸ் மேரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.