வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாத்தூா் தொட்டிப் பாலம் அருகே ரூ. 5.70 கோடி செலவில் புதிய பாலம் திறப்பு

News image
புதிதாக கட்டப்பட்ட பாலம்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருவட்டாறை அடுத்த மாத்தூா் தொட்டிப் பாலம் அருகே வாகனப் போக்குவரத்துக்காக ரூ. 5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான மாத்தூா் தொட்டிப் பாலத்தின் கீழ் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே பொதுமக்களின் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் ஆபத்து நிறைந்ததாக இருந்ததால் அந்தப் பாலம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ரூ. 5.70 கோடியில் குறைந்த உயரத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலத்தை தமிழக முதல்வா் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு அா்ப்பணித்தாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாத்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கு திருவட்டாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் அந்தோணி மைக்கேல் பொ்னாண்டோ, உதவி செயற்பொறியாளா் முருகன், திருவட்டாறு ஒன்றிய பொறியாளா் ஜினோ ஆன்றணி, அருவிக்கரை ஊராட்சி செயலா் ராஜன், அருவிக்கரை ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ஜாண் கிறிஸ்டோபா், சலேட் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சசி நன்றி கூறினாா்.