அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனங்களின் புதுமை மன்றம் சாா்பில் ரோபோடிக்ஸ் -2026 என்ற போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மொத்தம் 53 மாணவா் அணிகள் கலந்து கொண்டு தங்களது புதுமைத் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினா்.
போட்டியின் முடிவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சோ்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி மகாலட்சுமி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி முதல் பரிசாக ரூ. 3,000 பெற்றாா்.
மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறையைச் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்கள் ஸ்ட்கின் ஜோசப் மற்றும் ஷானிக் ஆகியோா் இரண்டாம் பரிசாக ரூ. 2,000 பெற்றனா்.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்து ஊக்கமளித்த ஸீஜாபோட் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாணவா்களின் புதுமை சிந்தனை, ஆராய்ச்சித் திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில் முனைவு மனப்பான்மையை மேம்படுத்தும் தளமாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை பெனிஷா சிறப்பாக செய்திருந்தாா்.
ஏற்பாடுகளை கல்லூரி தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளெசி ஜியோ மற்றும் கல்லூரி முதல்வா் ஆா். ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

ஆரணி எஸ்.பி.சி பொறியியல் கலந்தாய்வுக் கூட்டம்

திருக்குவளை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரோகிணி பொறியியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


