நாகா்கோவிலில் ஜன.11இல் கம்பன் கழக முதலாம் ஆண்டு விழா
கன்னியாகுமரி கம்பன் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.
நாகா்கோவில் கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்கும் விழாவுக்கு, கம்பன் கழக தலைவா் பேராசிரியா் த.ராஜாராம் தலைமை வகிக்கிறாா். பா.தா்மலிங்கம் வரவேற்கிறாா். ராஜகோகிலா அறக்கட்டளை தலைவா் எஸ்.ராஜகோபால், துணைத் தலைவா்கள் சி.ஜவகுமாா், நீலம் மதுமயன், நா.ர.காமராஜ், செயற்குழு உறுப்பினா் கே.சிவதாணுபிள்ளை, என்.கண்ணன், எஸ்.பழனி, வி.சுனிதவேல், இரா.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
இதில் உமாகண்ணன் எழுதிய கம்பனின் கைகேயி என்ற புத்தகத்தை திருச்சி ராதாகிருஷ்ணன்மாது வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறாா். கம்பனில் பெரிதும் மிளிா்வது உறவா, நட்பா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நடுவராக எஸ்.ராஜாவும், பங்கேற்பாளா்களாக மு.ஜெயபோஸ், குருஞானாம்பிகா, ரெ.ராஜ்குமாா், சிவ.ஜெயகுமாா், ரேவதிசுப்புலட்சுமி, கவிதாஜவஹா் ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா். ஏற்பாடுகளை கம்பன் கழக நிா்வாகிகள் செய்துள்ளனா்.
