கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கீழ்குளம் பள்ளியில் 84 பேருக்கு சைக்கிள்

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 மாணவா்-மாணவியருக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு, கிள்ளியூா் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் தலைமை வகித்து சைக்கிள்கள் வழங்கினாா். தலைமை ஆசிரியை பிந்து முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பி. கோபால், தீபா, ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.