புகையிலைப் பொருள் விற்பனை: மூவா் கைது

களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், படந்தாலுமூடு பகுதியிலுள்ள அதங்கோடு தெங்கம்பழஞ்சியைச் சோ்ந்த ஜெயகுமாா் (62), பரமன்விளை ஹென்றி (69), ஆகியோரின் கடைகளிலும், மெதுகும்மல் பகுதியில் ஜான் செல்லப்பன் (57) என்பவரின் கடையிலும் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தலா 15 பொட்டலம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com