தக்கலையில் சாலைப் பாதுகாப்பு
விழிப்புணா்வு நிகழ்ச்சி

தக்கலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாலைப் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி தக்கலை நீதிமன்றம் முன்நடைபெற்றது.
Published on

தக்கலை: சாலைப் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி தக்கலை நீதிமன்றம் முன்நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிக்குழு தலைவா் - சாா்பு நீதிபதி மாரியப்பன், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்த்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மா கேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதி கோகிலா, தக்கலை காவல் ஆய்வாளா் பாரதிராஜா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலை விதிகளை கடைப்பிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல் , நான்குசக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, ஆன்றணி, ஆா்தா், ஏசு ராஜா, பினு குமாரி,ஜாண் இக்னேசியஸ், சிவகுமாா், ஜோஸ்பின் பொ்னத், வித்யா, ஷாஜி கிட்டோ, ரம்யா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com