கன்னியாகுமரி
மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை மயங்கி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். அவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்கவா் திடீரென மயங்கி விழுந்தாா். அவரை சக பயணிகள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சமூக சேவகா் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.
