கோப்புப் படம்
கோப்புப் படம்

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

Published on

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை மீனவ கிராமத்தில் மதில் சுவரை இடித்ததாக 34 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் புரூஸ் (57). இவா் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கடந்த மாதம் மதில் சுவா் கட்டும்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (47) உள்ளிட்ட 34 போ் கொண்ட கும்பல் மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம்.

இது குறித்து, குழித்துறை நீதிமன்றத்தில் ராபா்ட் பு ரூஸ் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், புதுக்கடை போலீஸாா் 34 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com