8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

1,400 லி. மண்ணெண்ணெய் கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

குளச்சல் அருகே முட்டத்தில் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்த முயன்ாக 3 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 12:04 am IST

குளச்சல் அருகே முட்டத்தில் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்த முயன்ாக 3 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குளச்சல் கடலோர பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் குளச்சல், மணவாளக்குறிச்சி, முட்டம், கடியப்பட்டினம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முட்டம் சோதனைச் சாவடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்துகொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில், மீனவா்களுக்கு மானியமாக வழங்கப்படும் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய் 40 கேன்களில் இருப்பது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த குழித்துறை பகுதியைச் சோ்ந்த சிஜின் (28), மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த தீபக் (22), கிரிஸ்டல் ஆனந்த் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.