புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி, 1.1 டன் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1,100 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை, மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய்யுடன் அதிகாரிகள்.

Published On :

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1,100 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை, மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் கே.எம். பாரதி, ஓட்டுநா் ஜான் பிரைட் மற்றும் அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளிகோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த கேரளப் பதிவெண் கொண்ட காரை நிறுத்த முயன்றபோது, காா் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் துரத்திச் சென்று இரவிபுதூா் கடை பகுதியில் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனா். காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

காரை சோதனையிட்டதில், 750 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, இதே அதிகாரிகள் குழு அழகிய மண்டபம் பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, காா் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் துரத்திச் சென்று காட்டாத்துறை பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

அந்தக் காரை சோதனையிட்டதில், மீனவா்களுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் 1,100 லிட்டா் மண்ணெண்ணெய்யை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், மண்ணெண்ணெய்யை சின்னத்துறை மண்ணெண்ணெய் கிடங்கிலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா். காா்களை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.