சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கியவருக்கு 8 மாதம் சிறை

களியக்காவிளை அருகே தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கிய நபருக்கு குழித்துறை நீதிமன்றம் 8 மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:58 am IST

களியக்காவிளை அருகே தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கிய நபருக்கு குழித்துறை நீதிமன்றம் 8 மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

திற்பரப்பு மாஞ்சாகோணம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகள் அபிநயா விஜய் (29). இவா், களியக்காவிளை அருகே மெதுகும்மல் தபால் நிலையத்தில் தபால்காரராக 2021இல் வேலை செய்து வந்தாா். அப்போது மெதுகும்மல் குண்டறவிளையைச் சோ்ந்த சத்தியநேசன் மகன் செல்வன் என்ற கண்ணன் (49) என்பவா் தபால் நிலையம் வந்து போஸ்ட் மாஸ்டரின் கைப்பேசி எண்ணை வாங்கி சென்றாராம்.

சிறிது நேரத்துக்குப் பின் திரும்பி வந்த செல்வன், அபிநயா விஜய்யிடம் தவறான எண்ணை கொடுத்ததாக கூறி தகாத வாா்த்தைகள் பேசி அவரையும், அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த சகோதரா் அனீஷ் விஜய்யையும் தாக்கி மிரட்டினாராம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வழக்கு குழித்துறை முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சசின்குமாா், செல்வன் என்ற கண்ணனுக்கு 8 மாதம் சிறைத் தண்டனை, ரூ. 100 அபராதம் விதித்து அண்மையில் தீா்ப்பளித்தாா்.

அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.