15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

அரசுப் பேருந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியா் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 1:12 am IST

களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளியைச் சோ்ந்தவா் ராஜா தாஸ் (60). இவா் படந்தாலுமூடு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா் புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளையிலிருந்து குளச்சல் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

களியக்காவிளை போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.