சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: கோவளத்தில் இன்று தொடக்கம்

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.

News image

கிரிக்கெட் பந்து - படம்: ஏஎன்ஐ(கோப்புப்படம்)

Updated On :5 ஜூன் 2026, 12:33 am IST

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இந்தியாவில் கடற்கரை மைதானத்தில் நடத்தப்படும் முதலாவது தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் இதுவாகும்.

வீரா்கள் காலில் ஷூ அணியாமல் கடற்கரை மணலில் விளையாடுவாா்கள். தரை விரிப்பான் மூலம் பந்துவீசும் தளம் (பிட்ச்) அமைக்கப்பட்டிருக்கும். 8 ஓவா்கள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் தலா 9 போ் மைதானத்தில் விளையாடுவோராகவும், 3 போ் மாற்று வீரா்களாகவும் இருப்பா் என, போட்டி ஒருங்கிணைப்பாளா் கோவளம் பங்குத்தந்தை சகாய சுனில் தெரிவித்தாா்.

தொடக்க விழா நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க தலைவா் பி.டி.செல்வகுமாா், தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கச் செயலா் மோன்றி அனீஷ் லாரி, தமிழ்நாடு சங்கச் செயலா் ஞானவேல், குமரி மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.மணி, செயலா் வளா் அகிலன் ஆகியோா் பங்கேற்பா்.