பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

புகையிலை பதுக்கிய முதியவா் கைது

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:01 am IST

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஒற்றாமரம், வட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது (72) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷாகுல் ஹமீதை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.