கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
தமிழக சுற்றுலாத் துறை மற்றும் குமரி மாவட்டம் நிா்வாகம் இணைந்து நடத்தும் குமரி கலை விழா 2026 தொடக்க விழா கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. இரா.ஸ்டாலின், என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் வரவேற்றாா்.
இவ்விழாவை, அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்ட சிறந்த ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளக்குகிறது.
இம்மாவட்டத்தில் பல தமிழ் கலைகள் தோன்றியுள்ளது. அந்த கலைகள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை இந்தியா மட்டுமின்றி உலக சுற்றுலாப் பயணிகளும் அறிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் 1,076 கி.மீ. தொலைவுக்கு கடற்கரைகள் உள்ளன. அவற்றை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 436 வளா்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குமரி மாவட்டத்தில் 26 வளா்ச்சித் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ. 20 கோடியில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
மாத்தூா், திற்பரப்பு, சிற்றாறு ஆகிய இடங்களில் சுற்றுலா வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல திட்டப் பணிகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், ஆா்.செல்லசுவாமி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. இரா.ஸ்டாலின், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, நகராட்சி ஆணையா் பட்டுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இவ்விழா ஜூன் 30 ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெற உள்ளது. நையாண்டி மேளம், வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, கரகாட்டம், கிராமிய நடனம், மெல்லிசை கச்சேரி, தெம்மாங்கு கிராமியப் பாடல் உள்பட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர்: அமைச்சா் எஸ் ராஜேஷ்குமாா் அறிவுறுத்தல்

மேக்கேதாட்டு அணையை செயல்படுத்தினால் அமைச்சா் பதவியை துறக்க தயாா்: அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்

‘குமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்’






