சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகத்துக்கு அடிக்கல்

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 150 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

News image
மீன்பிடித் துறைமுகப் பணியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சா் மனோ தங்கராஜ்.
Updated On :4 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 150 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து, வாணியக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி வைத்தாா். இதில் நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா, குளச்சல் நகா்மன்றத் தலைவா் நசீா், வாணியக்குடி பங்குத்தந்தை சூசை ஆன்றனி, முன்னாள் பங்குத்தந்தை சொ்வாசியுஸ், துணைத் தலைவா் ஆரோக்கியம், செயலா் ஜிம்சன், ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவா் எட்வின் ஜோஸ், குருந்தன்கோடு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எனல்ராஜ், சைமன் காலனி ஊராட்சி முன்னாள் தலைவா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குளச்சல் மீன் துறை உதவி இயக்குநா் விா்ஜின் கிராஸ் நன்றி கூறினாா்.