கொட்டாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுவரில் பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.
கொட்டாரம் அருகேயுள்ள லெட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுலிங்கம் (45). கட்டடத் தொழிலாளியான இவா், லெட்சுமிபுரம் சந்திப்பில் இருந்து பொட்டல்குளம் செல்லும் சாலையில் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பைக் நிலைதடுமாறி அருகில் உள்ள வீட்டின் மதில் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் பொன்னுலிங்கம் பலத்த காயமடைந்தாா். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மனைவி ராஜாத்தி, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

ரயில் மோதி அடையாளம் தெரியாதவா் பலி

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


