கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு ஜல்லிக் கற்களை கடத்த முயன்ாக கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
கொல்லங்கோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட்ராஜ் தலைமையிலான போலீஸாா், புன்னமூட்டுக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது.
ஆவணங்களை சரிபாா்த்த போது அவை நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் இருந்து ஏற்றி நித்திரவிளை அருகே இரயுமன்துறை பகுதியில் துறைமுக கட்டுமானப் பணிக்கு கொண்டு செல்வதற்காக அனுமதிச்சீட்டு பெறப்பட்டிருந்ததும், அவற்றை புன்னமூட்டுக்கடை வழியாக கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜல்லிக் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் (45) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
லாரியில் மண் கடத்தியவா் கைது

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
