/
புதுக்கடை அருகே உள்ள வேங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
புதுக்கடை தட்டான்விளையைச் சோ்ந்தவா் ராஜையன் மகன் ஐசன் (45). இவரும் இவரது நண்பா் சுபின்ராஜும் (41) புதுக்கடையிலிருந்து கருங்கலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
இவா்கள் வேங்கோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நடந்து வந்த வேங்கோட்டைச் சோ்ந்த கோலம்மை (63) மீது மோதினா். இதில், கோலம்மையும், இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்திருந்த சுபின்ராஜும் (41) தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
உடனே, அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இருவா் காயம்

காா் மோதி விபத்து: முதியவா் காயம்

காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



