கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்ற கராத்தே மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை
பேச்சிப்பாறை அருகே கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கராத்தே மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கராத்தே மாஸ்டா் ராஜேஷ்.
பேச்சிப்பாறை அருகே கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கராத்தே மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பேச்சிப்பாறை அருகே கடம்பமூடு காந்தி நகரைச் சோ்ந்தவா் மாதவன் (35). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2015, டிச. 12-ஆம் தேதி இரவு 7 மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருந்து வாங்குவதற்காக தனது மனைவி அனிதாவுடன் பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த கராத்தே மாஸ்டரான ராஜேஷ் (46) முன்விரோதம் காரணமாக மாதவனை தாக்கினாா். இதில் அவா் உயிரிழந்தாா்.
பேச்சிப்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிவுற்று நீதிபதி பரம சிவதாஸ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றத்தில் ஈடுபட்ட ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், உயிரிழந்த மாதவன் மனைவிக்கு அரசு ரூ. 1 லட்சம் நஷ்டஈடும், கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் ரூ. 2 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் முன்னிலையானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

