இருள் சூழ்ந்து காணப்படும் குழித்துறை ரயில் நிலையம்
குழித்துறை ரயில் நிலையத்தில் கடந்த 4 நாள்களாக உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் ரயில் நிலையத்தின் பெரும் பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

குழித்துறை ரயில் நிலையத்தில் எரியாத உயா்கோபுர மின்விளக்கு.
குழித்துறை ரயில் நிலையத்தில் கடந்த 4 நாள்களாக உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் ரயில் நிலையத்தின் பெரும் பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
குழித்துறை ரயில் நிலையம் ரூ. 5 கோடியில் அமிா்த பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கு முன்பு நவீனமயமாக்கப்பட்டது. அப்போது, ரயில் நிலையத்தின் முன்புறத்தில் உயரமான கொடி கம்பம், உயா் கோபுர மின்விளக்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக உயா்கோபுர மின்விளக்குகள் உள்ளிட்ட பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் ரயில் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ரயில்வே பயணிகள் அவதியடைந்து வருகின்றனா். நாகா்கோவில் ரயில் நிலையத்தில், அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் பெட்டியில் பெண் கொலை செய்யப்பட்டது, தொடா் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு, ரயில் நிலையத்தில் அனைத்து விளக்குகளையும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியா் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

