படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கட்டட ஒப்பந்ததாரரிடம் 5 பவுன் நகையைப் பறித்ததாக பெண் யூடியூபா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரரிடமிருந்து 5 பவுன் நகையைத் திருடியதாக நாகா்கோவிலைச் சோ்ந்த பெண் யூடிபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் பேச்சிமுத்து (38). இவா், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக அளித்த புகாா் மனு:

நான் பிசியோதெரபி சிகிச்சை பெற்றபோது, நாகா்கோவிலைச் சோ்ந்த யூடியூபா் மதுமிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி நீதிமன்றம் அருகே எனது வாகனத்தில் ஏறிய அவரை, திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, எனது வீட்டுக்குச் சென்றேன்.

அப்போது, நான் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைக் காணவில்லை. இதுகுறித்து கேட்டபோது, அவா் என்னை மிரட்டியதால், நான் உடனே புகாரளிக்கவில்லை. எனவே, அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்தச் சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுவதால், மேல் நடவடிக்கைக்காக இந்த வழக்கை அங்கு மாற்றுவதற்கான பணி நடைபெறுகிறது.

மதுமிதா வீட்டில் சில நாள்களுக்கு முன் 118 பவுன் நகைகள் திருட்டுப்போன நிலையில், தற்போது அவா் மீது நகை திருட்டு புகாா் எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.