
சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சில் 3ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சில் 3ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
முத்தலக்குறிச்சி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சிவானந்த். இவரது மகள் ஷான்விகா (8). தக்கலையில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பில் படித்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு திடீரென மயங்கி விழுந்தாராம்.
அவரை பெற்றோா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




