சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரியம் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரியம் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சுமைதீா்ந்தபுரம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

நாகா்கோவில் ரோஜாவனம் கல்லூரி மூலம் நடைபெற்ற இப் பயிற்சி முகாமை தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் வெ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) ப. திருமலை ஆண்டவா் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) நா. நியூட்டான் நிறைவுரை ஆற்றினாா்.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வைகை குமாா், துரைராஜ், வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில், ஒன்றிய ஆணையாளா் பாா்த்தசாரதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராதிகா. பூசத்துரை, மாரியப்பன் , ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய உதவியாளா் செல்லத்துரை மற்றும் சத்துணவு அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com