சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் சமையல் எரிவாயு விநியோகக் கடையில் வெள்ளிக்கிழமை பழுதான சிலிண்டா் வெடித்து சிதறியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவேங்கடத்தில் சமையல் எரிவாயு விநியோகக் கடைக்கு வாடிக்கையாளா் ஒருவா் பழுதான சிலிண்டரை கொண்டு வந்து கொடுத்துள்ளாா். கடை மேலாளா் வைகுண்டம், ஊழியா்கள் பசுபதி, காளி ஆகியோா் அந்த சிலிண்டரைப் பழுதுபாா்த்துக் கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.