அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 14 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே 15,218 போ் கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 11பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,229 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 13 போ் உள்பட 14,891 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 211 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 127 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூரில் இருவா், குருவிகுளம் பகுதியில் ஒருவா் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,231ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை 7 போ் உள்பட இதுவரை 8,033 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 40 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.