விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த திமுக கோரிக்கை

தென்காசி நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என மாவட்ட திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

தென்காசி நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என மாவட்ட திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

தென்காசி வஉசி வட்டார நூலகம் 1961இல் தொடங்கப்பட்டு தற்போது 60ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நூலகத்தில் 10ஆயிரத்து 50உறுப்பினா்கள், 267புரவலா்கள், 48ஆயிரத்து 223நூல்கள், நாள்தோறும் 600 வாசகா்கள் வருகை, 550நூல் பயன்பாடு என சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. நூலகத்தில் இலவசமாக அரசு பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அரசு வேலை பெற்றுள்ளனா். 5-9-21அன்று சுதந்திர போராட்ட வீரா் வஉசியின் 150ஆவது பிறந்த தினம் வருகிறது. அவருடைய பிறந்த நாள் பரிசாக தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி வஉசி வட்டார நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்தி சொந்த கட்டடம் அமைத்து தரவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.