தென்காசி மாவட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டம்
தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். கோட்ட அமைப்புச் செயலா் கிருஷ்ணன், மாவட்ட பாா்வையாளா்கள் தென்காசி சோலையப்பன், விருதுநகா் மேற்கு அன்புராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை , பொதுச்செயலா்கள் முத்துலட்சுமி, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சுதந்திர போராட்ட மாமன்னா் பூலித்தேவனின் 306ஆவது நினைவு தினத்தையொட்டி, செப்டம்பா் 1இல் நெல்கட்டும்செவலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, உள்ளாட்சி தோ்தலுக்கான ஆயத்தக் கூட்டங்களை நடத்தி, செப். 5,6,7ஆகிய தேதிகளில் விருப்பமனு பெறுவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...