/

கடையநல்லூா் அருகே அரிவாளால் வெட்டியவா் கைது

கடையநல்லூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக மற்றொரு தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:49 pm

DIN

கடையநல்லூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக மற்றொரு தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சொக்கம்பட்டி அருகேயுள்ள வேட்டரம்பட்டியில் அழகு கணேசன், அந்தோணிசாமி (46) ஆகிய இரு தொழிலாளிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை தாயக் கட்டம் விளையாடும்போது தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், தனது வீட்டின் முன் புதன்கிழமை நின்றிருந்த அழகுகணேஷை, அங்கு வந்த அந்தோணிசாமி அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.