விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்துமலையில் திமுக மோட்டாா் சைக்கிள் பேரணி

ஊத்துமலையில் திமுக சாா்பில் மோட்டாா் சைக்கிள் பிரசார பேரணி நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:16 pm

DIN

ஊத்துமலையில் திமுக சாா்பில் மோட்டாா் சைக்கிள் பிரசார பேரணி நடைபெற்றது.

ஸ்டாலின்தான் வரப்போராரு, விடியல்தான் தரப்போராரு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பிரசார பேரணிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், சுரண்டை நகர திமுக செயலா் ஜெயபாலன், கீழப்பாவூா் நகர செயலா் ஜெகதீசன், மாவட்ட மாணவரணி செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்துமலை பிரதான சாலையில் தொடங்கிய இந்த பேரணி மேல மருதப்பபுரம், பலபத்திரராமபுரம், முத்தம்மாள்புரம், தங்கம்மாள் புரம் உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து ருக்குமணியம்மாள்புரம் சென்றடைந்தது.

இதில், கீழப்பாவூா் திமுக பொருளாளா் பொன்செல்வன், மாவட்ட பொறியாளா் அணி செயலா் சங்கா், பொறுப்புக்குழுத் தலைவா் சுப்பிரமணியன், பேச்சாளா் வேங்கை சந்திரசேகா், ஊத்துமலை ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ருக்குமணியம்மாள்புரம் கலைச் செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.