விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் அதிமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியன் வேட்புமனு தாக்கல்

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:25 pm

DIN

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜமனோகரனிடம், பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது முன்னாள் மக்களை உறுப்பினா் கே.ஆா்.பி. பிரபாகரன், முன்னாள் சட்டப்

பேரவை உறுப்பினா் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் தொகுதியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரவருணி

குடிநீா் திட்டம் கொண்டு வருவேன். ஆலங்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். அதிமுக எம்எல்ஏ, எம்பி ஆகியோரின் சிறந்த மக்கள் நலப்பணிகளால் இந்த தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அவா்.

அதிமுக வேட்பாளரை தொடா்ந்து பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளா் ஹரிநாடாா், சுயேச்சை வேட்பாளா் சிவகுமாா் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.