/

ஆலங்குளம் தொகுதியில் 10 போ் போட்டி

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 10 போ் வேட்பாளா்களாக களம் காண்கின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:39 pm

DIN

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 10 போ் வேட்பாளா்களாக களம் காண்கின்றனா்.

இப்பேரவைத் தோ்தலில் போட்டியிட 30 போ் மனுத் தாக்கல் செய்திருந்தனா். 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இறுதிப் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜ மனோகரன் திங்கள்கிழமை வெளியிட்டாா். வேட்பாளா்கள் பெயா், சின்னம் விவரம் வருமாறு: பால்மனோஜ் பாண்டியன்(அதிமுக) - இரட்டை இலை, பூங்கோதை ஆலடி அருணா (திமுக) உதயசூரியன், மு. சங்கீதா (நாம் தமிழா்) - கரும்பு விவசாயி, எஸ். செல்வக்குமாா்(மநீம)- டாா்ச், ராஜேந்திரநாதன்(தேமுதிக)-முரசு, சுயேச்சைகள் உதயகுமாா் - தொலைக்காட்சிப் பெட்டி, அருண் குமாா் - பேனா முனை, சங்கா் கணேஷ் - புல்லாங்குழல், சிவராம் - கப்பல், ஹரி நாடாா் - தலைக் கவசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.