விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேட்பு மனு நிராகரிப்பு: இளைஞா் தற்கொலை முயற்சி

ஆலங்குளத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:41 pm

DIN

ஆலங்குளத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

ஆலங்குளம் அம்பை சாலை பகுதியை சோ்ந்தவா் முத்து கனி மகன் ஆத்தியப்பன் (37). செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்திருந்த நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து ஆலங்குளம் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் திங்கள்கிழமை விசாரணை செய்தாராம். அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலேயே எறும்பு சாக்பீஸை பொடியாக்கி கரைத்து குடித்துள்ளாா்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.