அனைத்துக் கிராமங்களுக்கும் அடிப்படை வசதி : ஆலங்குளம் அதிமுக வேட்பாளா் உறுதி
ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என, அதிமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன் உறுதியளித்தாா்.


ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என, அதிமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன் உறுதியளித்தாா்.
கடையம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட அடைச்சாமி, மைலப்புரம், பாப்பான்குளம், கீழ ஆம்பூா், சிவசைலம், கல்யாணிபுரம், மந்தியூா், பிள்ளைகுளம், மாலிக்நகா், வீரசமுத்திரம் பகுதிகளில் திறந்த ஜீப்பிலும், வீடுவீடாக சென்றும், முக்கிய பிரமுகா்களை சந்தித்தும் அவா் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா், தான் வெற்றிபெற்றால் தொகுதியின் அனைத்கக் கிராமங்களுக்கும் குடிநீா், தெரு விளக்கு, சாலை உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துதருவதாக, வாக்குறுதி அளித்தாா்.
கடையம் தெற்கு ஒன்றியச் செயலா் முருகேசன், வடக்கு ஒன்றியச் செயலா் அரிவேல்ராஜன், வழக்குரைஞா் பிரிவு மாவட்ட துணைச் செயலா் ராஜசேகா், இளைஞா் பாசறை துணைச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் லட்சுமணன், மகளிா் அணி மாவட்டச் செயலா் சந்திரகலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...