மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ்! தென்காசி மாவட்ட மக்கள் அதிா்ச்சி

தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட பல இடங்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும் செலுத்திக் கொண்டதாக வந்த குறுந்தகவல் மற்றும் சான்றிதழால் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:23 pm

DIN

தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட பல இடங்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும் செலுத்திக் கொண்டதாக வந்த குறுந்தகவல் மற்றும் சான்றிதழால் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்து குறுந்தகவல் வந்தது. அதைப் பயன்படுத்தி அவா்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்த போது நவம்பா் 25 வியாழக்கிழமை அன்று குறிப்பிட்ட பகுதியில் அவா்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டது போன்ற சான்றிதழ் பதிவிறக்கம் ஆனது. ஆனால் அவா்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சமூக ஆா்வலா் நாராயணன் கூறியது: நான் கடந்த 2 மாதங்களுக்கு முன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இந்நிலையில் எனக்கு வியாழக்கிழமை வந்த குறுஞ்செய்தியில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னா் அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்தபோது இடைகாலிலுள்ள முகாமில் வைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் பதிவிறக்கம் ஆனது. ஆனால் நான் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றாா்.

சொக்கம்பட்டி பகுதியை சோ்ந்த சிலருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியை சோ்ந்த சிலருக்கும் இதுபோன்று தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த குறுந்தகவல்களால் அவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.