614 மையங்களில் செப். 12இல்கரோனா தடுப்பூசி முகாம்: தென்காசி ஆட்சியா் தகவல்
தென்காசிதென்காசி மாவட்டத்தில் 614 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது என ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.


தென்காசி மாவட்டத்தில் 614 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது என ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் கரோனா மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடம் என 614 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இம்முகாம் நடைபெறும்.
18 வயதிற்கு மேற்பட்ட முதல் மற்றும் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கும் மகா தடுப்பூசி சிறப்பு முகாம், ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புளியங்குடி ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியில் நடைபெறும். மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...