விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாளை தென்காசி மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சருக்கு நல்லூா் விலக்கில் வரவேற்பு

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் மகா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு திமுக சாா்பில் நல்லூா் விலக்கில் சிறப்பான வரவேற்பு

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:46 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் மகா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு திமுக சாா்பில் நல்லூா் விலக்கில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக ெ பாறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியயிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் செப்.12ஆம் தேதி 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசினா் மேல்நிலைப் பள்ளி, தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொள்கிறாா்.

இதையடுத்து ஆலங்குளம் அருகே உள்ள நல்லூா் விலக்கு அருகே தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அமச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.

இதில், மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர , பேரூா் கழகத்தின் செயலா்கள், மாவட்ட அணி அமைப்பாளா்கள் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.