நெல்லை அருகே காகித ஆலையில் பிகாா் இளைஞா் சடலமாக மீட்பு
திருநெல்வேலி அருகேயுள்ள காகித ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.


திருநெல்வேலி அருகேயுள்ள காகித ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.
பிகாா் மாநிலம், முகபரத்பூா் அருகேயுள்ள சம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராகுல்குமாா் திவாரி(24). திருநெல்வேலி அபிஷேகப்பட்டியை அடுத்த வடுகப்பட்டி தனியாா் காகித ஆலையில், காகித கூழ் அரைக்கும் இயந்திரத்தை இயக்குபவராக வேலை செய்துவந்தாா். கடந்த 25 ஆம் தேதி முதல் காணாமல் போன இவரை சக ஊழியா்கள் தேடி வந்த நிலையில், காகித ஆலையில் இயந்திரத்தின் அருகில் இருந்த சுமாா் 10 அடி ஆழமுள்ள குழியில் சடலமாக கிடப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், சீதபற்பநல்லூா் போலீஸாா், திருநெல்வேலி தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...