கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதோரிடம் ரூ. 17.06 லட்சம் அபராதம் வசூல்

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதமாக ரூ. 17 லட்சத்து 6 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:06 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதமாக ரூ. 17 லட்சத்து 6 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனோ பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை, பொதுசுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் பொதுசுகாதாரச் சட்டம் 1939 உள்பிரிவு 138இன்படி அபராதத் தொகை ரூ. 200லிருந்து ரூ. 500ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதமாக ரூ. 17 லட்சத்து 6 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுஇடங்களில் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.